திண்டுக்கல், ஜூலை 25 –
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் அதிகாலை முதல் அனுமனை தரிசனம் செய்து வருகின்றனர். வாயுதேவனின் அம்சமாக அஞ்சனாதேவியின் மகனாக விளங்கும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் வைகை ஆற்றங்கரையில் சுயம்புவாக பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். தடைகளை உடைக்கும் தோஷங்களை நீக்கும் தன்மை கொண்ட வீர ஆஞ்சநேயருக்கு ஆடி அமாவாசை தினத்தில் பலவகை பழங்கள், வடமாலை மற்றும் முறுக்கு மாலை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.
ஆஞ்ச நேயருக்கு வெண்ணை காப்பு மற்றும் பழ வகைகள் கொண்ட அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஸ்ரீவல்லப பெருமாள் வைகை ஆற்றில் எழுந்தருளி ஊர்வலமாக பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார். ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் நெய் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். வைகை ஆற்றில் புனித நீராடிய பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். ஆஞ்சநேயருக்கு பக்தர்கள் வட மாலை மற்றும் வெற்றிலை மாலைகள் சாற்றி சாமி தரிசனம் செய்தனர்.