திண்டுக்கல், ஆகஸ்ட் 03 –
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் மருத்துவ கழிவுகளை கொட்டி குடியிருக்கும் பகுதியில் தீ வைத்து எரித்ததால் அதிலிருந்து வெளிவரும் புகையால் குடியிருப்பு வாசிகள் மிகவும் மோசமான துர்நாற்றம் மற்றும் கெமிக்கல் கலந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் குடியிருப்பு வாசிகள் மிக மிக வேதனையுடன் தெரிவிக்கின்றனர். தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவ கழிவுகளை அள்ளி வந்து கிடங்கில் கொட்டப்பட்டு தீ வைத்து எரித்ததால் அதிலிருந்து கிளம்பும் புகையால் துர்நாற்றம் வீசத் தொடங்கிறது.
அந்தப் புகையை குடியிருப்பு வாசிகள் மற்றும் குழந்தைகள் சுவாசிக்க நேரிட்டதால் அங்கு நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அது சமயம் மாசு கட்டுப்பாடு வாரியம், பேரூராட்சி நிர்வாகம் இந்த கழிவுகளை கொட்டும் தனியார் மருத்துவமனையை எச்சரித்து இந்த மருத்துவக் கழிவுகளை வேறு இடத்தில் கொட்டுமாறு அங்குள்ள குடியிருப்பு வாசிகள் பொதுமக்கள் மனம் வேதனையுடன் கேட்டுக் கொள்கின்றனர்.