நித்திரவிளை, ஜூன் 28 –
நித்திரவிளை அருகே பூத்துறை பகுதியில் குட்கா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தா 120 பாக்கெட் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் பதுக்கி வைத்து விற்பனை செய்த பூத்துறை பகுதியை சேர்ந்த சிலுவையப்பன் (49) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.