நாகர்கோவில், அக். 04 –
நாகர்கோவில் கோணம் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுகர்வோர் மன்ற விழா கொண்டாடப்பட்டது. நுகர்வோர் மன்ற விழா விழாவிற்கு முதல்வர் முனைவர் சுசீலாபாய் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் டேமெரின் மெரால்ட் வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர் வழக்கறிஞர் சகிலா பிரவின், நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும் உரிமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். மூன்றாமாண்டு காயத்திரி சூரிய பிரபா நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார். மூன்றாமாண்டு விலங்கியல் துறை மாணவி பீஸ்மா நன்றி கூறினார்.



