நாகர்கோவில், ஜூலை 25 –
குமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் மகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்ட கூடை பந்தாட்ட கழகம் சார்பில் மாநில அளவில் 13 வயதிற்கு உட்பட்ட போட்டிக்கான மாவட்ட அணிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளன. இதற்கான போட்டி இன்று (25ம் தேதி) மாலை 4 மணியளவில் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.
இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 2012 ஜனவரி 1 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும். போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் ஆதார் அட்டை, கணினிமயமாக்கப்பட்ட பிறப்பு சான்றிதழ், படித்துக் கொண்டிருப்பதற்கான உறுதி அளிப்பு சான்றிதழ் கொண்டு வர வேண்டும்.