சென்னை, ஜூலை 15 –
நபார்ட் அமைப்பின் 44-வது நிறுவன நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இந்திய அரசின் நிதி சேவைகள் துறை செயலாளர் எம். நாகராஜு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், நபார்ட் தலைவர் கே.வி. ஷாஜி, நபார்ட் துணை மேலாண்மை இயக்குநர்கள் ஜி.எஸ். ராவத் மற்றும் ஏ.கே. மசூத், இந்தியன் வங்கி மற்றும் இந்திய ஓவர்சீஸ் வங்கியின் மேலாண்மை இயக்குநர்கள் மற்றும் நபார்டின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பல முக்கிய புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் முக்கியமானவை: லே (லடாக்) இல் நபார்ட்டின் துணை அலுவலகத்தின் தொடக்க விழா, நபார்ட்டின் அதிகாரப்பூர்வ வாட்ஸ் அப் சேனலின் வெளியீடு, கிராமப்புற உழைக்கும் ஏழைகள் வாழ்வாதார மேம்பாட்டிற்கான திட்டம், கிராமப்புற தேவைகளை மையமாகக் கொண்டு புதிய தொழில் நுட்பங்களை உருவாக்கும் திறந்த டிஜிட்டல் மேடை மற்றும் கிராம கூட்டு வங்கிகளுக்கான உட்புற புகார் தீர்வுக்கான திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.