வேலூர், ஜூலை 14 –
வேலூர் மாவட்டம் நண்பர்கள் டிரஸ்ட் மகளிர் அணி மற்றும் சி.எம்.சி. மருத்துவமனை இணைந்து நடத்திய தன்னார்வ இரத்ததான முகாம் பனந்தோப்பு இக்ரா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகளிர் அணி மாநில செயலாளர் ஹீனா கவுசர் தலைமை தாங்கினார். மகளிர் அணி மாநில துணை செயலாளர் ஷர்மிளா பேகம் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் Dr. அனீஸ் பாத்திமா மற்றும் மகளிர் அணி வேலூர் மாவட்ட துணை செயலாளர் ஹபீபுன்னிசா முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி உருது தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பர்ஜானா, 43 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆபிதா காணம், அல்ஹப்சா கிளினிக் சென்டர் டாக்டர் ஹபீபுன்னிசா ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்து இரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினர். நிகழ்ச்சியின் நிறைவாக மகளிர் அணி வேலூர் மாவட்ட செயலாளர் சாஜிதா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் டிரஸ்ட்டின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், இரத்ததான நன்கொடையாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு நன்றியினை தெரிவித்து கொண்டார்.