திண்டுக்கல், ஜூன் 20 –
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆணைக்கிணங்க கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி N. ஆனந்த் வழிகாட்டுதலின்படி திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் L.தர்மராஜ் தலைமையில் திண்டுக்கல் மாநகரத் தலைவர் சை. சையது அசாருதீன் சார்பாக தொடர்ந்து இரண்டாவது வருடமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தளபதி விஜய் பயிலக மாணவிக்கு கல்வி ஊக்கத்தொகை ரூபாய் 5000 வழங்கப்பட்டது. பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள், பள்ளிக் குழந்தைகளுக்குக் கல்வி உபகரணங்கள், சலவை தொழிலாளிகளுக்கான உபகரணங்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான நலத்திட்ட உதவிகள், தூய்மை பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகள், தனியார் பள்ளி ஊழியர்களுக்கான நலத்திட்ட உதவிகள் என 1000 நபர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் திண்டுக்கல் மாநகர தலைமை நிர்வாகிகள் காதர்மீரான், கௌதம், லோகநாதன், முத்துலெட்சுமி, அண்ணாத்துரை, அஜ்மல், ரகுமணிகண்டன், ஜோசப், நிக்கத், ஜான்சிராணி, சேகர், டோனி, யாக்கோப், லெட்சுமணன், வசந்த் மற்றும் கழகத் தோழர்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியை தளபதி விஜய் பயிலக ஆசிரியை சங்கீதா கவியரசு சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.