சுசீந்திரம், ஜுன் 28 –
சுசீந்திரம் அருகே உள்ள தேரூர் பேரூராட்சி மாதாந்திர சாதாரண கூட்டம் துணைத் தலைவர் மாதவன் தலைமையில் செயல் அலுவலர் ராஜேஷ் அய்யனார் முருகன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கவுன்சிலர்கள் எட்வட்ராஜ், ஆறுமுகம், கணேஷ், மீனாட்சி, ஐயப்பன், சங்கரம்மாள், மணிகண்டன், காஞ்சனா, ராஜஸ்ரீ, வீரபுத்திரபிள்ளை, சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது துணைத் தலைவர் மாதவன் அவர்களிடம் நிருபர்கள் பேரூராட்சி பணிகள் குறித்து கேட்டபோது பொதுமக்களின் குடிநீர் பிரச்சனை கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் அரசிடம் கோரிக்கை வைத்ததின் பெயரில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து தேரூர் பேரூராட்சி உட்பட்ட 15-வது வார்டு பாலகிருஷ்ணன் புதூர் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல் நீர் தேக்க தொட்டி கட்டி பிரதான குழாய் அமைக்கும் பணி முடிவடைந்து பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேற்படி பணிக்கான மதிப்பீட்டில் 15-வது வார்டு பாலகிருஷ்ணன் புதூர் உதிரப்பட்டி கடை கிராமம் இந்திரா காலனி பகுதியில் உள்ள 130 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதனை பயன்படுத்தி முதல் 130 விண்ணப்பங்கள் தொகை 6000 மட்டும் தேரூர் பேரூராட்சிக்கு செலுத்தி குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். மேற்படி குடிநீர் இணைப்புகளுக்கு சண்டேச் கட்டணம் செலுத்த தேவை இல்லை. தேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் இதுபோன்ற பணிகள் நடைபெற முயற்சி செய்து வருகின்றோம் என்று கூறினார்.



