ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 22 –
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்.
தேசிய அளவில் இந்திய மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் சொசைட்டி சார்பில் மண் சேறு தரைகளில் வாகன அதிவேக ஓட்ட இறுதி போட்டி கோவாவில் நடைபெற்றது. பல மாநிலங்களிலிருந்து 25 குழுக்கள் தாங்கள் வடிவமைத்த வாகனத்துடன் போட்டியில் பங்கு பெற்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலை பேராசிரியர் முனைவர் எம். சிவசுப்பிரமணியம் வழிகாட்டுதலுடன் பல்கலை மாணவர்கள் எஸ். நித்திஷ், டி. தாமரைசெல்வன், அர்ஜுனா, வில்லியம் சாமுவேல் உள்பட 40 பேர் கொண்ட குழு தாங்கள் வடிவமைத்த வாகனத்துடன் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்று 6 வினாடிகளில் 50 மீட்டர் தூரம் சேற்று மண் சாலையில் வாகனைத்தை ஓட்டி பல வகைப் போட்டியிலும் முதலிடம் பெற்று “சேம்பியன் ஷிப்” கோப்பையும் ரொக்கப் பரிசும் சான்றிதழும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன், இணை வேந்தர் டாக்டர் எஸ். அறிவழகி ஸ்ரீதரண், துணை வேந்தர் முனைவர் எஸ். நாராயணன், பதிவாளர் முனைவர் வி. வாசுதேவன் , இயக்குநர்கள், டீன்கள், துறைத் தலைவர்கள் பாராட்டினர்.