திருப்பூர், அக். 06 –
தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் சார்பில் தியாகி கொடிகாத்த குமரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சேர்மன் முனைவர் ஏ. ரபீக் தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் விஜயலட்சுமி, தேசிய செயலாளர் யுவராஜ், தலைவர் கா. சித்ரா, தமிழ்மாநில துணை ஆகியோர் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தியாகி கொடிகாத்த குமரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்மாநில சேக், இளைஞரணி தலைவர் இளைஞர் கோபாலகிருஷ்ணன், செயலாளர் மகளிரணி செயலாளர் உமைபா, மேற்கு மண்டல இளைஞரணி செயலாளர் மணி, திருப்பூர் மாவட்ட மகளிரணி தலைவி வித்யா, நாமக்கல் மாவட்ட தலைவர் குணசேகரன், மகளிரணி தலைவி கவிதா, கோவை மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் ருக்கியா மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக இணைந்த இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



