புதுக்கடை, பிப். 2 –
இளம் விழுதுகள் அறக்கட்டளை சார்பாக தேங்காய்பட்டணம் துறைமுக கடலோர பகுதியில் தூய்மை பணி இன்று மாலையில் நடந்தது. இந்த தூய்மை பணி நிகழ்வில் மீன் வளத்துறை மற்றும் மீனவர் நலத்துறை சார் ஆய்வாளர் லிபின் மேரி தலைமை வகித்தார்.
ஊரக வளர்சித்துறை உதவி பொறியாளர் ரெஜன், பரவை சாரிட்டபின் டிரஸ்ட் கணக்கர் ஐசக், கடலோர காவல் குழும ஆய்வாளர் ரா. ததேயு குமார், பைங்குளம் ஊராட்சி முன்னாள் தலைவர் விஜயராணி, தக்கலை அரசுப்பள்ளி மாணவர் அடிட்டிக் ஷில், இளம் விழுதுகள் அறக்கட்டளை நிறுவனர் இராஜகோபால், செயலாளர் ஹான்ஸ்டன் ஜிக்சிங், பொருளாளர் ஷாஜன் மற்றும் தன்னார்வலர்களும், மாணவர்களும் திரளாக கலந்துகொண்டு தூய்மை பணி செய்தனர். நிகழ்சியில் கலந்துகொண்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.



