கிருஷ்ணகிரி, செப்டம்பர் 19 –
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காரப்பட்டு அருகே ஆதாலியூர் கிராமத்தில் மலை மீது அமைந்திருக்கும் 24 மனை தெலுங்கு செட்டியார் குல தெய்வமான கவி சென்றாயன் பெருமாள் கோவில் உள்ளது. இந்தக் கோயில் 12 கிராம பொது மக்கள் குல தெய்வமாக வணங்கி வருகின்றனர். இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் உள்ள கோவிலில் முதலில் தோன்றிய கருவறை பகுதியில் புனரமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழைய சுவர் மீது சுமார் 15 டன் எடையுள்ள கருங்கற்களை மேற்கூறை அமைத்து புனரமைக்க இருப்பதாகவும் இது அமைத்தால் கீழ் இருக்கும் அடித்தளம் சுவர்கள் உறுதியாக இல்லை. அதை அப்படியே கட்டினால் கட்டிடம் சரிந்து விடும்.
இதனால் பக்தர்களுக்கு ஏராளமான பாதிப்பு ஏற்படும். தரமான முறையில் புதிய கடக்கால் கட்டி கட்டிடம் அமைத்து புனரமைக்க வேண்டும். கோவிலுக்கு ஏராளமான நன்கொடையாளர்கள் உள்ளனர் என்பதால் அறநிலைத்துறை அதிகாரிகள் கோவில் புனரமைக்கும் பணியை நிறுத்தி கோவில் நிர்வாகத்தினர் நன்கொடையாளர்களிடம் நன்கொடை வசூலித்து புதிய கட்டிடம் அமைத்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டுமென 12 கிராம பக்தர்கள் 24 மனை தெலுங்கு செட்டியார்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஏராளமான கோரிக்கை விடுத்துள்ளனர்.



