தென்தாமரைகுளம், ஆக. 13 –
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தமிழக அரசின் உத்தரவுப்படி பள்ளி, கல்லூரிகள், காவல் நிலையங்கள் ஆகியவற்றில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்றன. அந்த வகையில் தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் மேல்நிலைப்பள்ளியில் போதை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பள்ளி தாளாளர் கால்வின் தலைமை வகித்தார்.
போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தென்தாமரைகுளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங், தலைமை காவலர் லெனின் ஆகியோர் பேசினர். அதன் பின் மாணவ மாணவிகள் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நிறைவில் பள்ளி தலைமை ஆசிரியை அனு ஜெ பிரீதா நன்றி கூறினார். இம்முகாமில் ஏராளமான மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



