தென்காசி, ஜுலை 9 –
தென்காசி மாவட்டம் தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயத்தில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக இலவச திருமணம் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், பால் என்ற சண்முகவேல், பிரபாகரன், சுந்தர ராஜன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.