தென்காசி, ஜூலை 24 –
தென்காசி மாவட்டம் தென்காசி நகராட்சிக்குட்பட்ட 18 வது வார்டில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் நியாய
விலைக்கடை அடிக்கல் நாட்டு விழா தென்காசி சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பழனி நாடார் தலைமையில் நடைபெற்றது. அடிக்கல் நாட்டு விழாவில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் சந்தோஷ் , தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், துணைத் தலைவர் சித்திக், தென்காசி மாவட்ட மதிமுக அவைத்தலைவர் வெங்கடேஸ்வரன், தென்காசி நகர காங்கிரஸ் பொருளாளர் ஈஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர்கள் பூமாதேவி, ரஃபீக், சுப்பிரமணியன் மற்றும் திமுக, காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்