தூத்துக்குடி, செப். 12 –
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator) திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது. இந்த பயிற்சித்திட்டம், துறைமுகத்தின் பெருநிறுவன சமூக பொறுப்புத் திட்டங்களின் ஒரு பகுதியாக கடல்வழி கப்பல் கட்டுமானம் தொடர்பான சிறப்பு அமைப்பின் மூலம் மூலம் நடைபெற்றது. இந்நிறைவு விழாவின் போது, தரவு உள்ளீட்டாளர் திறன் பயிற்சித் திட்டத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துறைமுகத் தலைவர், சான்றிதழ்களை வழங்கினார். மேலும் ஏற்றுமதி – இறக்குமதி மற்றும் சேமிப்புக்கிடங்கு நிர்வாகிகளுக்கான புதிய பயிற்சித் திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.
வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் தலைவர் சுசாந்த குமார் புரோஹித் இப்பயிற்சியை துவக்கி வைத்தார். இரண்டு மாத கால திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டத்தின் மூலம் 25 மாணவர்களின் தொழில் நுட்ப திறன் மேம்படுத்தப்பட்டு வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அவர்களில் பலர் Flipkart’ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
வ.உ.சி. துறைமுகம், கப்பல், துறைமுகங்கள் மற்றும் நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் தொடங்கப்பட்ட CEMS அமைப்பின் மூலம் வேலைவாய்ப்பில்லாத மற்றும் பின்தங்கிய இளைஞர்களைத் திறமையுள்ளவர்களாக்கும் பல்வேறு பயிற்சித் திட்டங்களை நடத்த்p வருகிறது. ஊநுஆளு நடத்தும் இந்தத் திட்டங்கள் தொழிலக உபகரணங்களைக் கொண்டு செய்முறை, விளக்கங்களின் மூலம், அனுபவக் கற்றலை வழங்குகின்றது.
அத்துடன் தொழிற்துறை அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்களையும் வழங்கி வேலை வாய்ப்பை மேம்படுத்துகின்றது. தொழில் சார்ந்த நிறுவனங்களுடன் இணைந்து வேலைவாய்ப்பு ஆலோசனைகளை வழங்குவதோடு, சிறுதொழில் வழிகாட்டுதல்களையும் வழங்குவதால் பயிற்சியாளர்களின் தொழில் மற்றும் தொழில் முனைவோர் பயணத்திற்கு பலமான அடித்தளத்தை உருவாக்குகிறது. துறைமுகம CEMS மூலம் நடத்தவுள்ள பல எதிர்கால பயிற்சித் திட்டங்களில் ஏற்றுமதி – இறக்குமதி நிர்வாகிகள், சேமிப்புக்கிடங்கு நிர்வாகிகள்,Courier Associate Operations பொருள் விநியோகச் செயல்பாடுகளை மேற்பார்வை செய்யும் நிர்வாகிகள், Welders கணிணி எண்கணிப்புக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கான பயிற்சிகள் அடங்கும். இந்தத் திட்டங்களை நடத்த துறைமுகம் CEMS-க்கு ருபாய் 56.95 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.
துறைமுக ஆணையத் தலைவர், தனது உரையில் கூறுகையில் வரும் சில மாதங்களில் 175–க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டங்களின் மூலம், பல்வேறு துறைகளில் பயன்பெறவுள்ளனர் என்று தெரிவித்தார். வ.உ.சிதம்பரனார் துறைமுகம் ஊளுசு முயற்சிகளின் மூலம் சுகாதாரம், கல்வி, சமூக ஆதரவு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் பல திட்டங்களைத் தொடர்ச்சியாக செயல்படுத்தி வருகிறது.
இந்த முயற்சிகள் தூத்துக்குடி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுப்புற சமூகங்களின் முழுமையான வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்நிகழ்ச்சியில் ராஜேஷ் சௌந்தரராஜன், வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத் துணைத்தலைவர் அவர்கள் மற்றும் பிற மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



