By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு
அரசியல்தமிழ்நாடுதூத்துக்குடி

தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பாஜக கடும் எதிர்ப்பு

Last updated: July 18, 2026 1:43 pm
July 18, 2026
25 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஜூலை 18 –

தூத்துக்குடி நகரின் பிரதான சாலைகளில் புதிதாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உடனடியாக அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால், பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 63 டாஸ்மாக் கடைகள் மூடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி சில கடைகள் மூடப்பட்டிருந்தாலும், தூத்துக்குடி எட்டயபுரம் சாலை மற்றும் குறிஞ்சி நகர் மெயின் ரோட்டில், கலைஞர் அரங்கம் அருகில் ஏற்கனவே செயல்பட்டு வந்த ஒரு டாஸ்மாக் கடையின் அருகிலேயே அடுத்தாக புதிதாக மேலும் இரண்டு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஒருபுறம் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக அறிவித்துவிட்டு, மறுபுறம் ஒரே பகுதியில் கூடுதலாக கடைகள் திறப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். மது போதையால் கொலை, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மேலும் புதிய கடைகள் திறப்பது சமூக விரோத செயல்களுக்கு வழிவகுக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே நிலவுகிறது.

மேலும், இந்த பகுதி பெண்கள், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பயன்படுத்தும் பிரதான சாலையாகும். புதிய டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் மது அருந்துவோரின் நடமாட்டம் அதிகரித்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களும் சாலையை பயன்படுத்துவோரும் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் தான் மது போதையில் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெற்றது. தற்போது தன்னை தூய சக்தியாக கருதிக் கொள்ளும் தவெக அரசும் அதே பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறது.

எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, அந்த பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மூன்று டாஸ்மாக் கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று சித்ராங்கதன் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அகில பாரத ஆர்எஸ்எஸ் தலைவர் கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா நிர்வாகிகளுடன் ஆலோசனை
மார்த்தாண்டத்தில் இளம் பெண்ணுடன் ஆபாச வீடியோ சாட்டிங் செய்த ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி அதிரடி
சட்டசபை தேர்தலில் வாக்களிக்க பார்வை குறைபாடுடைய வாக்காளர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
ஈரோட்டில் அரசு நிலம் வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரி பெரியம்மாரியம்மன் கோவிலில் 1008 புடவை அலங்காரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

July 20, 2024
124 Views
வெற்றி விநாயகர் நகரில் கோலாகல கொண்டாட்டம்
மார்த்தாண்டம் அருகே சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 27 வருடம் சிறை
நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக்கல்லூரி மாணவிகள் லேப்டாப் வழங்க கோரி திடீர் போராட்டம்: போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த தவெக நிர்வாகிகளை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி சென்றதால் பரபரப்பு
துடிப்பு மிக்க இந்தியா என்ற சிந்தனை கொண்டவர்களுக்கு வாழ்த்து மடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account