தூத்துக்குடி, ஆகஸ்ட் 28 –
தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவலர்களுக்கான உடற்பயிற்சி கூடம் மற்றும் குடியிருப்புகளுக்கு சின்டெக்ஸ் டேங்க் தண்ணீர் தொட்டி அமைத்தல் அடிக்கல் நாட்டு விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. தூத்துக்குடி ஆயுதப்படை காவலர் குடியிருப்பு வளாகத்தில் காவல் அதிகாரிகள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் வசித்து வருகின்றனர்.
மேற்படி அவர்களுக்கு பயன்படும் வகையில் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உடற்பயிற்சி கூடம் அமைக்கும் அடிக்கல் நாட்டு விழா மற்றும் காவலர் குடியிருப்பில் புதிய சின்டெக்ஸ் டேங்க் தண்ணீர் தொட்டி அமைக்கும் பணி ஆகியவை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தூத்துக்குடி நகர உட்கோட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் டாக்டர் C. மதன், ஆயுதப்படை காவல் ஆய்வாளர் சுனை முருகன் உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.



