திருச்சி, மே 22 –
துறையூர் அருகே சிக்கத்தம்பூர் பாளையத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தேவராஜ் (26) நேற்று மதியம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பாததால், அவரது தாய் தேடியபோது கிணற்றில் செருப்பு மட்டும் கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து துறையூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு கிணற்றில் இருந்து தேவராஜனின் சடலத்தை மீட்டனர்.



