திருவண்ணாமலை, செப். 11 –
துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 16 கால் மண்டபம் முன்பு பொதுமக்களுக்கு பாஜகவினர் இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கே. ரமேஷ் தலைமை தாங்கினார். தொண்டர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இதில் முன்னாள் மாவட்ட தலைவர் இரா. ஜீவானந்தம், மாவட்ட பொதுச் செயலாளர் கவிதா பிரதீஷ், மாவட்ட துணை தலைவர் பி. கிருஷ்ணமூர்த்தி கலாவதி, மாவட்ட செயலாளர்கள் டி. அறவாழி, சஞ்சீவி, பழனி, மாநகர தலைவர்கள் கே.பி. மூவேந்தன், சந்தோஷ் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



