திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 02 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏனாதிமங்கலம் கிராமத்தில் சிறுவர் பூங்கா திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல் தலைமை தாங்கினார். மேற்கு ஒன்றிய செயலாளர் பி.வி.ஆர். விசுவநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட கைப்பந்து கழக தலைவர் வாலிபால் மணி அனைவரையும் வரவேற்றார். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌதம சிகாமணி துவக்க உரையாற்றினார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., கலந்துகொண்டு தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவினை திறந்து வைத்து இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக ஊராட்சி மன்ற தலைவர் விஜயன் நன்றி கூறினார்.