திருவள்ளூர், ஜனவரி 07 –
திருவள்ளூர் அடுத்த சேலை கிராமத்தைச் சேர்ந்த சிவகாமி என்பவர் திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 26 வது வார்டு பெரிய குப்பம் லால் பகதூர் சாஸ்திரி தெருவில் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார்.
மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகளிடம் அனுமதி பெற்ற பின்னரே மீன் வியாபாரம் செய்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 10,000 மதிப்புள்ள மீன் வகைகளை வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது அப்பகுதி திமுக கவுன்சிலர் தனலட்சுமி, இங்கு ஏன் மீன் வியாபாரம் செய்கிறாய் இது விஐபி பகுதி உங்களைப் போன்ற ஆட்கள் இங்கு வரக்கூடாது வியாபாரமும் செய்யக்கூடாது எனவும் ஜாதிப் பெயரை சொல்லி இழிவுபடுத்தி ஒருமையில் பேசியதுடன் இங்கு மீன் வியாபாரம் செய்ய வேண்டும் என்றால் எனக்கு மாமுல் தர வேண்டும் எனவும் மிரட்டியதாக கூறப்படும் நிலையில் மன உளைச்சலுக்கு ஆளான மீன் வியாபாரி சிவகாமி மன உளைச்சலும் பொருளாதார நஷ்டமும் ஏற்பட்டுள்ளது என்று திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில் புகரைப் பெற்றுக் கொண்ட நகர காவல் துறையினர் திமுக கவுன்சிலர் தனலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


