மார்த்தாண்டம், செப். 17 –
திருவட்டார் அருகே பாரதபள்ளி பகுதியை சேர்ந்தவர் ராபின் ஜெயக்குமார் (45). பிளம்பர். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளார். நேற்று மாலை வீட்டில் இருந்து பைக்கில் ஜெயக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் ஒன்று பைக்கில் பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராபின் ஜெயகுமார் பலத்த காயமடைந்தார்.
உடனடியாக மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவிக்கு பின், குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மாலை ராபின் ஜெயக்குமார் உயிரிழந்தார். இது குறித்து அவர் மனைவி சுஜாதா திருவட்டார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


