மார்த்தாண்டம், ஆக. 22 –
திருவட்டார் வட்டம் வியன்னூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்து இருப்பதை வாங்கப்படுகிறதா, சரியான முறையில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார்.
பொதுமக்கள் தங்களை நாடி வந்து கேட்கும் போது தகுந்த பதில்களை அவர்களுக்கு வழங்குவதோடு அவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செந்தூர் ராஜன், துறை அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



