சுசீந்திரம்.ஏப்.19
தெங்கம்புதூர் அருகே உள்ள பணிக்கன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சுதன் வயது 34 ,கூலி தொழிலாளி இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த மன வேதனையில் இருந்தவர் சம்பவத்தன்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றவர் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது அண்ணன் சிவன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


