திருப்பூர், ஜூலை 25 –
திருப்பூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆகியோர் மீது அவதூறு பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூரில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மைச் செயலாளருமான துரை வைகோ உள்ளிட்ட தலைவர்களின் நட்பெயருக்கு களங்கம் விளைவிப்பதோடு சட்ட ஒழுங்கு பிரச்சனையையும் சாதிய மோதல்களையும் உருவாக்கும் விதமாக செயல்பட்டு வரும் திருப்பூர் துரைசாமி, நாஞ்சில் சம்பத், வல்லம் பஷீர் உள்ளிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
மேலும் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மை செயலாளர் துரை வைகோ மீது தொடர்ந்து அவதூறை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவதூறு பரப்பும் நபர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் மதிமுகவினர் கூறினர். இந்த நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய, பகுதி கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.