திருப்பூர், ஜூலை 17 –
போயம் பாளையம் பாட்டாளி மக்கள் கட்சியின் 37-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியை சார்பில் நெருப்பெரிச்சல் அடுத்த ஜிஎன் கார்டன் பகுதியில் கொடியேற்று விழா மற்றும் இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ஜெயமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில பொருளாளர் சையத் மன்சூர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட செயலாளார் ஜெயமுருகன், வடக்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் விஜயகுமார், நகரச் செயலாளர் ஜெய்சங்கர், தொழிற்சங்க செயலாளர் மயில்சாமி, தெற்கு மாநகர செயலாளர் தங்கராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 2026 தேர்தலுக்கு முன் அனைத்து பகுதிகளிலும் கிளைகள் அமைத்து கட்சி கொடி கம்பங்களை நிறுவி தேர்தல் பணிகளை விறுவிறுப்பாக மேற்கொள்வது என முடிவெடுத்தனர்.