ஊத்துக்குளி, ஆகஸ்ட் 03 –
உங்களோடு ஸ்டாலின் திருப்பூர் மாவட்டம் பெருந்துறை சட்டமன்ற தொகுதி ஊத்துக்குளி அருகே உள்ள மொரட்டு பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட சப்பட்ட நாயக்கன் பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகை ,
பட்டா சிட்டா பெயர் மாற்றுதல், குடிநீர் இணைப்பு வரி, கட்டிட வரைபடம் அனுமதி, சொத்து வரி பெயர் மாற்றுதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், மகளிர் சுய உதவிக் குழு கடன் வசதி, ஏற்படுத்தித் தருதல், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்று, சிறு குறு விவசாயி சான்று, காலதாமத பிறப்பு இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்டவைகளை ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுவாக எழுதிக் கொடுத்தனர்.
இந்த முகாமில் பங்கேற்ற 2000க்கும் மேற்பட்டோருக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பிரபு தலைமையில் கிடா வெட்டி விருந்து வைக்கப்பட்டது. இதில் திமுக ஒன்றிய செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, தாசில்தார் முருகேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி விமலாவதி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டாட்சியர்கள், கிராம ஊராட்சி செயலர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.