திருப்பூர், ஆக. 15 –
திருப்பூர் மாவட்டம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று (15.08.2025) நடைபெற்ற சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பினை பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஏற்றுக்கொண்டார். பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் வெண்புறாக்களையும், வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.
தொடர்ந்து, சிறந்த காவலர்கள் (காவல் ஆணையாளர் அலுவலகம்) 34, (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்) 20 என மொத்தம் 54 காவல் துறையினருக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த 159 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு என மொத்தம் 213 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். பின்னர், சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் வாரிசு தாரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.



