திருப்புவனம், ஜூலை 04 –
திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்திரகாளி அம்மன் திருக்கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித்குமார் காவல்துறையினால் தாக்கப்பட்டு உயிரிழந்ததற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே. வாசன் எம்பி இரங்கல் தெரிவித்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து தமாகா சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்
S. உடையப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.S.K. ராஜேந்திரன், சிவகங்கை மாவட்டத் தலைவர் K.K. பாலசுப்ரமணியன் ஆகியோர் மாநில நிர்வாகிகளுடன் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டிற்கு நேரில் சென்று அவரின் தாயாருக்கும், குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறி கட்சியின் சார்பில் ஒரு லட்சம் ரூபாயை நிதி உதவியாக வழங்கினார்கள். அப்போது தமாகா வட்டார தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.