திருப்புவனம், ஜூலை 29 –
திருப்புவனம் நாடார் திருமண மண்டபத்தில் கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா பி.ஆர். செல்வராஜ் தலைமையில் ஆர்.கே. கணேசன்,
ஜேம்ஸ் சேவியர் ஆகியோர் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பள்ளி குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகள் இடம் பெற்றது. இதில் சிறந்த வெற்றியாளர்களுக்கு தொழிலதிபர் சரவணன், லிங்கம் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
அதன் தொடர்ச்சியாக 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது. விழா நிறைவில் அதிக மதிப்பெண் பெற்ற 30 க்கும் மேற்பட்ட மாணவர் மாணவிகளுக்கு 1500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது ஆர். வேலவன் தலைவர் உறவின்முறை, முத்துப்பாண்டி உறவின்முறை செயலாளர் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.