கிருஷ்ணகிரி,ஜன.31- மதுரை மாவட்டம் வெள்ளாளப்பட்டி அரித்தப்பட்டி மற்றும் நாயக்கர்பட்டி ஆகிய பகுதிகளில் மத்திய அரசு டங்ஷன் சுரங்கம் அமைப்பதற்காக நடவடிக்கை எடுத்ததை இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த சில நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து மாநில தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் மத்திய அரசு நிச்சயம் மக்களுக்கு எதிரான ஒரு விஷயத்தை செய்யாது, என்றும் இது குறித்து உங்களுடன் கலந்துரையாடுவதற்காக மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி வருகை தந்துள்ளார் என்று கூறினார். மதுரை விமான நிலையம் வருகை தந்த மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி அவரை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கிருஷ்ணகிரி மாநில செய்தி தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



