திருப்புவனம், செப். 23 –
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காதி சர்வோதயா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனமானது தேவகோட்டை ரஸ்தாவை தலைமை இடமாக கொண்டு காதி சர்வோதயா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் கிளைகள் சிவகங்கை, காரைக்குடி, பள்ளத்தூர், தேவகோட்டை, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தமாக 10 கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொறுப்பாளர்கள் நியமிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையால் 13 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டதாக
சொல்லப்படுகிறது.
இதில் சங்கச் செயலாளர் ஜோதி தலைமையில் பொறுப்பாளர்கள் நிர்வகித்து வந்துள்ளதாகவும் அவ்வாறு செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுக்கு மேலாக இந்த கடை திறக்கப்படவில்லை. இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடைபெற்று வந்த நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் செய்துள்ளனர்.
இது சம்பந்தமாக தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் தாசில்தார் தலைமையில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் கடையை திறந்து விற்பனை செய்தனர். இதனை கண்டித்து மற்ற நிர்வாகிகள் கடை முன்பு கூடி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் கடை மீண்டும் அடைக்கப்பட்டது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி 50 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் காரைக்குடி மற்றும் திருப்புவனத்தில் உள்ள கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் சர்வோதய சங்கச் செயலாளரான ஜோதி தலைமையில் பூட்டுக்கள் நீக்கப்பட்டு மீண்டும் கடை திறக்கப்பட்டு விற்பனை துவங்கியது.



