திருப்பத்தூர், ஏப். 29 –
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மிட்டாளம் வன்னியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் புகழேந்தி (36). இவர் 2012ம் ஆண்டு மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎப்) சேர்ந்தார்.
அதனைத் தொடர்ந்து, இவர் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றினார். தற்போது மகாராஷ்டிரா மாநிலம் காட்சிரோலியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் 2021ல் ஸ்ரீநகரில் பணியாற்றிய போது, ‘Valley QAT (Quick Action Team) அதிரடிப் படையில் ஒரு பகுதியாக இருந்து 20க்கும் மேற்பட்ட ஆபரேஷன்களில் பங்கேற்று 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை வீழ்த்தியுள்ளார். தொடர்ந்து ‘மலுரா ஆபரேஷன்’ (Malura Operation) போது, ‘A+’வகை பாகிஸ்தான் பயங்கரவாதி மற்றும் அவரது கூட்டாளிகளை துணிச்சலாக வீழ்த்தியுள்ளனர்.
இவரது குழுவினரை பாராட்டி ஜனாதிபதி திரௌபதி முர்மு வீரதீர விருது வழங்கி கவுரவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் டிஜி ஸ்ரீ ஞானேந்திர பிரதாப் சிங் ராணுவ வீரர் புகழேந்திக்கு வீரதீர விருது வழங்கி பாராட்டினார்.



