திருப்பத்தூர், செப். 15 –
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இந்த ஆண்டு சட்டமன்ற பேரவையில் மக்களின் குறைகளை நேரடியாக கேட்டறியும் பணிகள் துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டம் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மொத்தம் 10,000 சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படவுள்ளது. கடந்த15.07.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் முதல் முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/திட்டங்களை அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும், மற்றும் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில் மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் உங்களுடன் ஸ்டாலின்” முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்கு உரிய ஆவணங்களுடன் (குடும்ப அட்டை ஆதார் அட்டை வங்கி புத்தகம், தொலைபேசி எண்) நேரில் சென்று பயனடையமாறு கேட்டுகொள்ளப்படுகிறது. மேலும், இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நமது திருப்பத்தூர் மாவட்டத்தில் மொத்தம் 209 முகாம்கள் நடைபெறவுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜீலை 15 தேதி முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை 72 முகாம்களும், இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 16 முதல் செப்டம்பர் 15 வரை 72 முகாம்களும் என மொத்தம் 144 முகாம்கள் நடைபெற்று முடிவுற்றது.
அதன்படி தற்போது இறுதியாக மூன்றாம் கட்டமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 16 முதல் அக்டோபர் 14 வரை மொத்தம் 65 முகாம்கள் நடைபெறவுள்ளது.
17.09.2025 அன்று காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை கீழ்கண்ட 6 இடங்களில் முகாம் நடைபெறவுள்ள விவரம்:
1
நகராட்சி, பேரூராட்சி/நகர பஞ்சாயத்து, வட்டாரம்
முகாமில் கலந்து கொள்ள ஒதுக்கப்பட்டுள்ள வார்டு மற்றும் கிராமம் விவரம்
முகாம் நடைபெறும் இடம்
திருப்பத்தூர்நகராட்சி
வார்டு எண்.2122
2
ARK மஹா சின்னமதார் நெரு
திருப்பத்தூர்.
வாணியம்பாடி நகராட்சி
வார்டு எண்.29,30
இஸ்லாமியா ஆண்கள் கல்லூரி, நியூடவுன்
ஜோலார்பேட்டை
சின்னகம்மியம்பட்டு&
3.
AGM மஹால் வேலுரான் வட்டம்.
வட்டாரம்
பெரியகம்மியம்பட்டு
பெரியகம்மியம்பட்டு
ஆர்மஹால்.ஆர்.மேல்
ஆலங்காயம் வட்டாரம்
பெத்தவேப்பம்பட்டுக கோவிந்தாபுரம்
நிம்மியம்பட்டு, நிம்மியம்பட்டு ஊராட்சி
- நாட்றம்பள்ளி வட்டாரம்
மாதனூர் வட்டாரம்
சிக்கணாங்குப்பம்
மோதகப்பள்ளிக குமாரமங்கலம்
ஸ்ரீவாரி திருமண மண்டபம்,
சிக்கனாங்குப்பம்
6.
S.V.N திருமண மண்டபம் கரும்பூர்
இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று. முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், அங்கு வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள் சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வரும் 10.09.2025 அன்று முதல் துவங்கி அந்தந்த பகுதிகளில் முகாம் நடைபெறும் இரண்டு நாட்களுக்கு முன்னரே அனைத்து வீடுகளுக்கும் நேரடியாக சென்று வழங்கி உள்ளனர். பொதுமக்கள் முகாமில் தங்களால் கோரப்படும் கோரிக்கைகளுக்கு ஏற்ப ஏற்கனவே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பத்துடன் அதற்குண்டான உரிய ஆவணங்களை இணைத்து முகாமில் அளிக்க தெரிவிக்கப்படுகிறது.
உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தில் உங்கள் பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் க.சிவசௌந்திரவல்லி அவர்கள் தெரிவித்துள்ளார்.



