ராமநாதபுரம், ஜுலை 16 –
திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் / வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற சமுதாய மாநாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து வெள்ளாளர் முன்னேற்ற கழகம் இனமான சொந்தங்கள் மாவட்டத் தலைவர் அஜித்குமார் தலைமையில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் பங்கேற்ற வெள்ளாளர் முன்னேற்ற கழகம் உறவுகள் அனைவருக்கும் மாவட்ட தலைவர் அஜித்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நன்றி அறிவிப்பு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சியில் ஒருங்கிணைந்த வேளாளர் மற்றும் வெள்ளாளர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள
உத்தரகோசமங்கை, மத்தியரேந்தல், முதுகுளத்தூர், சாயல்குடி, கே.வலசை, மஞ்சக்கொள்ளை, மெய்யனேந்தல், பாண்டியூர், மண்டபம், தங்கச்சி மடம், ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் அணிவகுத்து சென்று கலந்து கொண்டு சிறப்பித்த உறவுகள் அனைவருக்கும் மற்றும் மாநாட்டில் பங்கேற்ற இராமநாதபுரம் மாவட்ட உறவுகள் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு வழங்கிய நம் நெஞ்சில் நிறைந்து உள்ள கொடை வள்ளல்கள் ராமநாதபுரம் சேர்ந்த டாக்டர் தினேஷ் முகில், தொழிலதிபர் ஜெயம் குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் கார்த்திகேயன், இராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னோடி பொறியாளர் சந்திரசூடன் ஆகியோர் உதவிக்கு இராமநாதபுரம் மாவட்ட நம் உறவுகள் மற்றும் வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் நெஞ்சார்ந்த கோடான கோடி நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.
மேலும், விரைவில் இராமநாதபுரம் மாவட்டத்தில் நம் இனம் உறவுகள் ஒன்று திரண்டு வெள்ளாளர் முன்னேற்றக் கழகம் சார்பில் மாபெரும் பொது கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். இதுகுறித்து நம் உறவுகள் தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட தலைவர் அஜித்குமார் அறிக்கையில் கூறி உள்ளார்.