தின தமிழ் ஆசிரியரின் இணையதள செய்தி தொடக்க சிறப்புரை…..
தமிழை பருகுவோம், பருகிய தமிழை பக்குவமாய் எடுத்துரைப்போம், அப்படி எடுத்துரைக்கும் தமிழை யாரும் அழித்து விட முடியாதபடி காப்போம், தமிழ் மொழி வளர்ச்சிக்காய் தன்னலம் பாராது உழைப்போம்.
ஆதித்தமிழன் முதல் இனி வரும் தமிழனின் தலைமுறை வரை அனைவருக்கும் யாம் தமிழின் மீது கொண்ட பற்றுதலாலும், தமிழின் சிறப்பை அறிந்ததாலும், கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் தோன்றிய மூத்த குடியாம் எம் தமிழ் குடியை வணங்கி தமிழனாய் இருப்பதே எமக்குப் பெருமை, தமிழ் மொழியை வளர்ப்பது எனது கடமை, தமிழ் மொழிக்காக என்னை அர்ப்பணிப்பதே தமிழுக்கும் தமிழருக்கும் நான் ஆற்றும் தொண்டாகும் என்பதை வலியுறுத்தி என் தாய் தமிழ் வாழ்க என்று வாழ்த்தி உங்களை வணங்குகிறேன்.
இந்த மே முதல் நாளில் இணையதளம் மூலம்
நம்முடைய தாய்மொழியான தமிழில் குமரி மாவட்டத்தில் இருந்து அச்சு பதிப்பு காகிதமாக வெளி வந்து கொண்டிருக்கும்* தின தமிழ் தினசரி காலை நாளிதழ் * தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகமெங்கும் வாழ்கின்ற தமிழர்களின் கரங்களிலும் தவழ வேண்டும் என்ற நல்ல நோக்கிலும், உலகெங்கும் வாழும் தமிழர்களை தின தமிழ் செய்தி மூலம் ஒன்றிணைத்து தமிழோடு சார்ந்து இருக்க செய்வதே இந்த இணையதள தமிழ் செய்தியின் முக்கிய நோக்கம் ஆகும்.
எனவே:
“தமிழாய்! தமிழனாய்!! தமிழ் மொழிக்காய்!!!”
எப்பொழுதும் உங்கள் பேராதரவை தின தமிழ் இணையதளத்திற்கு வழங்கி தமிழனின் பெருமையை பார்போற்ற செய்வோம்.
என்றும் உங்கள் பேராதரவுடன் உங்கள்
"தின தமிழ் "
Congratulations