திண்டுக்கல், ஜூலை 5 –
திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர், பொறுப்பாளர்கள் பணி நிறைவு விழா நிகழ்ச்சி மற்றும் அரும்பியதும் விரும்பியதும் நிகழ்ச்சி ஜூலை மாதம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் சுவாகத் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் Rtn.H. புருசோத்தமன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னதாக ஜூலை மாதம் பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடும் சங்க உறுப்பினர்களை வாழ்த்தும் விதமாக பிறந்தநாள் மற்றும் மணநாள் கேக்குகளை வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து அவர்களை கௌரவிக்கும் விதமாக பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மாவட்ட ஆளுநர் Rtn.R. சண்முகசுந்தரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி சங்கத்தின் வளர்ச்சி குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் Rtn.D. பவன்ஜி பட்டேல் , திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் உதவி ஆளுநர் Rtn.M. செல்வகனி, Rtn.S. சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின்போது மேற்கு ரோட்டரி சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் விடைபெறும் நிகழ்ச்சியில் செய்த சேவைகள் திரையில் ஒளிபரப்பப்பட்டு காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்ச்சியின் முடிவில் திண்டுக்கல் மேற்கு ரோட்டரி சங்கத்தின் செயலாளர் Rtn.P. சந்திரசேகரன் நன்றி கூறினார்.