திண்டுக்கல், மே:02
திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தமிழகத்தில் தற்போது வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர், மோர் பந்தல் அமைத்து பொது மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டுமென தி.மு.க. நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டார். தி.மு.க.துணை பொதுச்செயலாளர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி, திண்டுக்கல் தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினர் இ.பெ.செந்தில்குமார் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி தி.மு.க. சார்பில் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் முன்பு கிழக்குப் பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார் ஏற்பாட்டின் பேரில் நீர்,மோர் பந்தல் அமைக்கப்பட்டு தூய குடிநீர்,சுவையான மோர், பொதுமக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில்
அவைத்தலைவர் சேகர், துணைச் செயலாளர்கள் நாகராஜன், தமிழ்செல்வன் பொருளாளர் மூர்த்தி, பிரதிநிதிகள் பாண்டித்துரை, முத்து, சபரிநாதன், மாநகர தொண்டர் அணி அமைப்பாளர் ஜாகிர் உசேன், துணை அமைப்பாளர் சிவமணி, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கண்ணன், ரஜினிகுமார், பெருமாள், ஆட்டோ கருப்பையா உட்பட ஏராளமான தி.மு.க.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.