கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை தாலுகாவுக்கு உட்பட்ட தாழக்குடி கிராமம் கேரளப்ப நேரி குளப்புறவில் பொதுப்பணி பொறியியல் துறையால் விவசாய பாசன தேவைக்காக கட்டப்பட்ட பிரதான கால்வாய் சேதப்பட்டு விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு செல்வது சிரமம் ஏற்பட்டதை அறிந்து அந்த கால்வாயின் சேதமான பகுதியை சரி செய்ய துரித நவடிக்கை எடுக்கும் பொருட்டு பாசன துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ மற்றும் தாணு பிள்ளை, தாழை காந்தி, மற்றும் பாசன துறை உறுப்பினர்களுடன் விவசாயிகளும் சேர்ந்து சரி செய்யும் கால்வாயை பார்வையிட்டனர். மேலும் பணியை துரிதமாக செய்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.



