சுசீந்திரம், செப். 15 –
அம்மாண்டிவிளை அருகே அருள்மிகு பத்மநாபன் தோப்பு ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோயிலில் கலசாபிஷேகம் நடந்தது. நிகழ்ச்சியில், குமரி மாவட்ட முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். வெள்ளிமலை பேரூர் திமுக செயலாளர் ரங்கராஜா, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் பால மனோகர், திருக்கோவில் திருவிழாக்குழு நிர்வாகிகள் ஈஸ்வர பாக்கியம், பாலகிருஷ்ணன், ரமேஷ், ஹரி கோபால், குமரி மாவட்ட திருக்கோவில்கள் மராமத்து பொறியாளர் ஐயப்பன், ஸ்ரீ காரியம், ராஜசேகர் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர்.



