தருமபுரி, ஜூன் 30 –
தருமபுரி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் சோகத்தூர் ஊராட்சியில் BLA-2, BLC, BDA கிளை கழக நிர்வாகிகள், அணியின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் மேற்கு ஒன்றிய செயலாளர் டி.எல். காவேரி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஒன்றிய அவைத் தலைவர் செல்வராஜ் வரவேற்புரை ஆற்றினார். ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ்.கே.எம். சதீஷ்குமார், தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தருமபுரி தொகுதி பார்வையாளர் டி. செங்குட்டுவன் சிறப்புரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பூத் வாரியாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் கழக ஆட்சியின் 4 ஆண்டுகள் சாதனைகளை எடுத்துக் கூறி பணியாற்ற வேண்டுமென்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட பொருளாளர் தங்கமணி, முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் டாக்டர். மாதப்பன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் மாது, தகவல் தொழில்நுட்ப அணி உதயசூரியன், மாணவர் அணி கௌதம், சுற்றுச்சூழல் அணி சுப்பிரமணி, சுகுமார், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மோகன், ஒன்றிய இளைஞரணி திலீபன், ராஜ், அர்ஜுன், சம்பத்குமார், கவியரசன், பிரபாகரன், கோவிந்தன், அண்ணாதுரை, சரவணன், ஆட்டோ ரவி, சுப்பிரமணி, அன்பரசன் வெங்கடேஷ், சின்னசாமி, சின்னதுரை, அருள்குமார், கார்த்திகேயன், ஆனந்தராஜ், முருகன், குணசேகரன், நாகராஜ், பிரதாப், மகளிர் உள்ளிட்ட கிளை கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.