தருமபுரி, ஆக. 11 –
தருமபுரி மாவட்டத்திற்கு வருகின்ற 17.08.2025 அன்று மாவட்டத்தில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்து முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதை முன்னிட்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் ஆகியோர் தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் ஊராட்சி, பி.எம்.பி கல்லூரி அருகில் விழா நடைபெறும் இடத்தையும் முன்னேற்பாடு பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
உடன் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ. சுப்பிரமணி, மனோகரன் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



