By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு
ஆன்மிகம்தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை: முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்பு

Last updated: March 21, 2026 5:28 pm
March 21, 2026
47 Views
Share
SHARE

தருமபுரி, மார்ச் 21 –

தருமபுரியில் ரம்ஜான் பண்டிகையையொட்டி நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர்.

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த ரம்ஜான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் தருமபுரி மாவட்டத்திலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அனைத்து பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தருமபுரி நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் சார்பில் தருமபுரி – கிருஷ்ணகிரி மெயின் ரோட்டில் உள்ள ஈத்கா ஏரிக்கரையில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த சிறப்பு தொழுகையில் தருமபுரி மாவட்ட தலைமை ஹாஜி பதல கரீம் கலந்து கொண்டார். இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். சிறப்பு தொழுகை முடிந்த பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் நல்வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட முத்தவல்லிகள் சங்கத் தலைவர் ஜப்பார், நகர அனைத்து மசூதிகளின் கூட்டமைப்பின் செயலாளரும், தமிழ்நாடு அனைத்து மசூதிகளின் ஐக்கிய ஜமாத் மாநில துணை செயலாளருமான எக்பால், தலைவர் முனவர் ஜான், பொருளாளர் முஸ்தாக், துணை தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர். தொடர்ந்து முஸ்லிம்கள் ஏழைகளுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்த சிறப்பு தொழுகையை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பாலக்கோடு – பென்னாகரம் இதேபோன்று தருமபுரி டேகிஸ்பேட்டை, கீழ் மசூதி தெரு , முகமதுஅலிகிளப் ரோடு, மதிகோன்பாளையம், வி. ஜெட்டிஅள்ளி, வட்டார வளர்ச்சி காலனி, அண்ணா நகர் ஆகிய இடங்களில் உள்ள மசூதிகள் மற்றும் தருமபுரி நகரை சுற்றியுள்ள அனைத்து மசூதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றனர்.

இதேபோல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளான தொப்பூர், பாலக்கோடு, பென்னாகரம், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, ஏரியூர், நல்லம்பள்ளி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், மொரப்பூர், கம்பைநல்லூர், மாரண்டஹள்ளி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்களில் ரம்ஜான் பண்டிகை சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சிறப்புத் தொழுகை நடத்தினர்.

இந்த ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள மசூதிகள் மற்றும் பள்ளிவாசல்கள் வண்ண மின்விளக்குகளால் ஜொலித்தது. ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு அனைத்து இறைச்சி கடைகளிலும் கூட்டம் அலைமோதியது.

விளம்பரம்

You Might Also Like

மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ சத்தியகுமார் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
சேலம் மாவட்ட விவசாயிகள் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று பயன் பெற மாவட்ட ஆட்சித் தலைவர் அழைப்பு
ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணபலன்களை உடனே வழங்க வேண்டும்: அரசுக்கு கோரிக்கை
ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
இரத்தப் பிரிவு பொருந்தாவிட்டாலும் சிறுநீரக மாற்று!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கை

அல்லிநகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ( 2025 )பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்

June 4, 2025
58 Views
குடிநீர் குழாய் உடைந்து சாலையை மூழ்கடித்த தண்ணீர்
மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!
அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம்-தருமபுரி
குமரியில் 16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை; மகளிர் போலீசார் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account