தருமபுரி, ஆகஸ்ட் 29 –
தருமபுரியில் முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் பள்ளி மாணவர்கள் பிரிவில் ஏழு சுற்றுகள் நடைபெற்று. இதில் 6.5 புள்ளிகள் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தில் தர்மேஷ் முகுல், இரண்டாம் இடத்தில் தேவேஷ் முகுல், மூன்றாம் இடத்தில் திருப்புகழ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் D. சாந்தி, தருமபுரி மாவட்ட சதுரங்க கழகத்தின் செயலாளர் மற்றும் இந்த போட்டியின் முதன்மை நடுவர் P. ராஜசேகரன் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். இந்த போட்டியின் மூலம் முதலிடத்தை பிடித்த தர்மேஷ் முகுல் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளார்.



