தருமபுரி, செப்டம்பர் 23 –
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலை வசதி, குடிநீர் வசதி, இலவச முதியோர் தொகை, இலவச வீட்டு மனை பட்டா மற்றும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ஆகியவை வேண்டி 495 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. தருமபுரி IDBI வங்கி கிளையின் மூலம் ஆறு பள்ளி மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தேன்மொழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சுமதி மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடனிருந்தனர் .



