தருமபுரி, செப்டம்பர் 01 –
தருமபுரியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் கேலோ இந்தியா மாவட்ட தடகள மையம் சார்பில் மறைந்த முன்னாள் ஹாக்கி வீரர் மேஜர் தயான்சந்த் அவர்களின் பிறந்தநாளினை தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருவதையொட்டி மாணவ, மாணவிகளுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
50 மீ தொடரோட்டம், 50 மீ ஓட்டம், யோகா, கயிறு இழுத்தல், மூத்த குடிமக்களுக்கான 300 நடை போட்டிகள் ஆகியவை நடத்தப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் கலந்து கொண்டு மிதிவண்டி பேரணியை தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்/வீராங்கனைகளிடையே விளையாட்டின் முக்கியத்துவம் குறித்தும், மிதிவண்டி ஓட்டுவதின் அவசியத்தை எடுத்துரைத்தும், வீரர்/வீராங்கனைகளுடன் மிதிவண்டி ஓட்டினார்.
மிதிவண்டி பேரணி மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கி நான்கு ரோடு சந்திப்பு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று திரும்பி மாவட்ட விளையாட்டரங்கத்திலேயே முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, மருத்துவ பணிகள் இணை இயக்குநர் சாந்தி, நகர் நல அலுவலர் இலட்சிய வர்ணா உள்ளிட்ட பயிற்றுநர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உடன் இருந்தனர்.



