தென்காசி, ஆக. 07 –
தமிழ் நாடு பிரஸ் கிளப் தென்காசி மாவட்டம் உறுப்பினர்கள் சிறப்பு கூட்டம் கடையநல்லூர் குமரன் பத்திர எழுத்தக அலுவலகத்தில் வைத்து மண்டல செயலாளர் வசந்த் தலைமையில் சங்க வளர்ச்சி குறித்து ஆலோசனை நடைபெற்றது. குற்றாலத்திற்கு பொது செயலாளர் வருகையையொட்டி அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாநில பொருளாளர் புதிய செல்வம் கலந்துகொண்டு நிருபர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆய்க்குடி முருகேசன், மாவட்ட செயலாளர் ரூபன்ராஜ், மாவட்ட துணை தலைவர் சமரசகுமார், வீரமணி மாவட்ட துணைசெயலாளர் ஆத்தியப்பன், மாவட்ட ஆலோசகர் சுப்பிரமணி மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.