திருப்பூர், ஜூலை 9 –
வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணை 297-யை ரத்து செய்து 3 ஆண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணை 420-யை திரும்ப பெற வலியுறுத்தி மாவட்ட தலைநகரில் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் கிராம உதவியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட ஆரம்ப நிலை பணிகள் தொடங்கி அனைத்து நிலை பணிகளும் கால முறை ஊதியத்தில் பணி அமர்த்தப்பட்டு வருகிறது. இத்துறையின் ஆதார பிரிவாக விளங்கும் நில அளவைப் பதிவேடுகள் துறையில் ஆரம்ப நிலை பணியாக இருக்கும் புல உதவியாளர் பணியிடங்களை வெளி முகமை மூலம் நியமனம் செய்வதற்காக தமிழ்நாடு அரசு வருவாய் (ம) பேரிடர் மேலாண்மைத் துறை, நில அளவை (ம) நிலவரித் திட்ட அலகு 07.09.2023 அன்று அரசாணை 297-யை பிறப்பித்து இருந்தது.
வெளி முகமை மூலம் புல உதவியாளர்களை பணியமர்த்தும் அரசாணை 297-யை ரத்து செய்து 3 ஆண்டுகளுக்கு நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணையை நிர்வாக அனுமதி அளிக்கும் அரசாணை 420-யை திரும்ப பெற வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



